ராமேஸ்வரம் : 10 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,7 க்குள் தீர்த்தங்கள் திறந்து, பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
கொரோனாவால் 2-020 மார்ச் 24 முதல் ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்டு, செப்.,1 முதல் ஊரடங்கு தளர்வினால் இக்கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதித்தனர். ஆனால் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு அனுமதிக்கவில்லை. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது. தீர்த்தம் திறக்க பலதரப்பினரும் வலியுறுத்தியதால் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அரசிடம் எடுத்துரைத்தார்.நேற்று கோயில் நிர்வாகம், மூடி கிடக்கும் தீர்த்தங்கள் பிப்., முதல் வராத்திற்குள் திறக்க உள்ளதால், அதற்கான அலுவல் பணி நடக்கிறது என தெரிவித்தது. 10 மாதத்திற்கு பின் கோயிலுக்குள் புனித தீர்த்தம் திறந்து பக்தர்கள் நீராட உள்ளதை இந்து அமைப்பினர், பக்தர்கள் வரவேற்றனர்.