உடுமலை:உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. கோவில் எழுப்பி, 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அதற்கு வர்ணம் பூசி புதுப்பித்து, கும்பாபிஷேகம் வரும், 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கும்பாபிஷேக முகூர்த்தகால் நடப்பட்டு; பக்தர்கள் வீடுகளில், முளைப்பாலிகை இட்டுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.