சூலூர்:சின்னியம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் சம்ப்ரோக்சனம் நாளை நடக்கிறது.சின்னியம்பாளையம் பி.என்.பி., காலனி சித்தி விநாயகர் கோவில் பழமையானது. இக்கோவில் வளாகத்தில், ஸ்ரீ தேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் சம்ப்ரோக்சன விழா துவங்கியது. மாலை வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று மாலை, கும்பங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டு, முதல்கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன.இன்று இரு கால யாக பூஜைகள் நடக்கின்றன. நாளை காலை நான்காம் கால யாக பூஜை முடிந்து, 7:00 மணிக்கு கரிவரதராஜ பெருமாளுக்கு சம்ப்ரோக் ஷனம் நடக்கிறது.