சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. நுாற்றாண்டு பழமையான இக்கோயிலில் 1993ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த தீர்மானித்து, கடந்த ஒரு ஆண்டாக திருப்பணி நடந்தது. இப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஜன.23ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, லட்சுமி பூஜையுடன் நான்காம் கால யாகபூஜை நடந்தது. காலை 10:25 மணிக்கு கோயில் விமானம், ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அழகுநாச்சியம்மன், விநாயகர், முருகன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகமும், தீபாராதனை நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள், கிராம அம்பலகாரர் புலவர் காந்தி, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.