பதிவு செய்த நாள்
26
ஜன
2021
10:01
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே பூமாண்டான்வலசு, செலம்பங்குட்டை கருப்பண்ண சாமி திருக்கோவில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை 6.30 மணி அளவில் மங்கள இசை, அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, புண்யா கவாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது. கொடுமுடி காவேரி தீர்த்தம் கொண்டு வர சென்றனர். மாலை 6 மணியளவில் முதல் கால யாக பூஜை, இரவு மூலவர் யந்திர ஸ்தாபனம். அஷ்டபந்தனம் சாற்றுதல்., நாளை காலை 7.30 மணி அளவில் கடம் புறப்பாடு. நாளை காலை 9.30 மணி அளவில் கோபுர விமானம் மகா கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேகம், மூலவர் அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.