உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் 2018ல் கும்பாபிஷேகம் நடந்தது.
மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு முதல்,இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட நீரால் அபிஷேகம் நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு நேற்று காலை 10:00 மணியளவில் பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் 21 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.வெள்ளிக் கவச சர்வ அலங்காரத்தில் காணப்பட்டார்.மேலக்கொடுமலுார் ஸ்ரீதர், ரமேஷ் குருக்கள்,மங்கள பட்டர், சுப்பையா ஆகியோர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர்