ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் நீராடல்: 10 மாதத்திற்கு பின் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2021 03:02
ராமேஸ்வரம்:10 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கொரோனா ஊரடங்கு தளர்வால் செப்.,1 முதல் தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இருப்பினும் ராமேஸ்வரம் கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய ஊரடங்கு தளர்வில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் புனித நீராட அரசு அனுமதித்தது. நேற்று காலை 5:30 மணிக்கு கோயிலில் முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா பக்தருக்கு புனித தீர்த்தம் ஊற்றி நீராடலை துவக்கி வைத்தார். கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உட்பட பலர் பங்கேற்றனர். தீர்த்தம் திறந்ததும் 3950 பக்தர்கள் புனித நீராடி நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.மதுரை பக்தர் நிவேதா 30, கூறுகையில், ராமர் தரிசித்த தீர்த்த தலமான இக்கோயிலில் புனித நீராட வாய்ப்பு கிடைக்குமா என்ற மனக்குறையுடன் வந்தோம். ஆனால் இன்று காலை குடும்பத்தினருடன் புனித நீராடி பெரும் பாக்கியம் பெற்றோம். மனக்குறை நீங்க, முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புனித நீராடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடவுள் அருளாசியுடன் ஊருக்கு சந்தோஷமாக திரும்பி செல்கிறோம் என்றார்.