மொடக்குறிச்சி: கொடுமுடி புது மாரியம்மன் கோவிலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடுமுடியில் பிரசித்தி பெற்ற புது மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு தீ மிதி விழா, கடந்த மாதம், 26ல் தொடங்கியது. காவிரியிலிருந்து யானை மீது தீர்த்தக்குடம் எடுத்து வருதல், தினமும் மாரியம்மனுக்கு தீபாராதனை மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடந்தன. முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், 60 அடி நீள குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். பொங்கல், மாவிளக்கு வைபவம் மற்றும் மஹா பூஜை இன்று நடக்கிறது. கம்பம் காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், வாணவேடிக்கை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. ?ம் தேதி சிம்ம வாகனத்தில் புது மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, முத்துப்பல்லக்கு ஊர்வலம் செல்வதுடன், தீ மித விழா நிறைவடைகிறது.