பதிவு செய்த நாள்
04
பிப்
2021
06:02
குளித்தலை: குளித்தலை அடுத்த, கொசூர் பஞ்., குப்பமேட்டுபட்டி ஒத்தவீடு பகுதியில் உள்ள, சிங்கம்பட்டி பங்காளிகளின் குலதெய்வமான ராஜலிங்கமூர்த்தி, கொப்பாட்டியம்மன், கருப்பசாமி, மதுரை வீரசாமி, பட்டவன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த, ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதைதொடர்ந்து ராஜலிங்கமூர்த்தி, கொப்பாட்டியம்மன், கருப்பசாமி, மதுரைவீரசாமி, பரிவார கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் செய்ய காவிரி நதியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர். பின்னர். கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து, முதல்கால பூஜை, கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து ராஜலிங்கமூர்த்தி, கொப்பாட்டியம்மன், கருப்பசாமி, மதுரைவீரசாமி, பட்டவன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.