பதிவு செய்த நாள்
06
பிப்
2021
05:02
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அன்னப்பன்பேட்டை தாயுமான சுவாமிகள், தை விசாகம் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் முன்னிலையில் நடந்தது.
தஞ்சாவூர் அருகே அன்னப்பன்பேட்டையில் தாயுமான சுவாமிகளின் தை விசாகம் குருபூஜை விழாவை முன்னிட்டு, குரு மூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அங்குள்ள மீனாட்சி சுந்தர தம்பிரான் குருமூர்த்தத்திற்கும் சிறப்பு ஆராதனை செய்விக்கப்பட்டது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து சிவஞான கொலு காட்சி நடந்தது. பூஜைகளை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் செய்வித்தார். இதில் ஆதீன வேலப்ப தம்பிரான் சுவாமிகள், ஆதீன கோவில் கண்காணிப்பாளர்கள் சண்முகம், குருமூர்த்தி, கண்ணன், பொது மேலாளர் திருமாறன், அலுவலக மேலாளர் சுந்தரேசன், காசாளர் மகேஷ், ஆதீனப் புலவர் குஞ்சிதபாதம், சைவசித்தாந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அன்னை கருணை இல்லம் அம்பலவாணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.