திட்டக்குடி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு, திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியில் நிதி சேகரிக்கப்பட்டது.
திட்டக்குடி அடுத்த ராமநத்தம், தொழுதூர், ஆவட்டி பகுதியில் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கல்லூர் சக்திவேல் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலர் வெங்கடேசன், பொருளாளர் பிச்சைப்பிள்ளை, ரவி, கிருஷ்ணமூர்த்தி, குழந்தைவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் ராமர் கோவில் கட்ட நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். முக்கிய பிரமுகர்களை சந்தித்த நிதி சேகரிக்கும் குழுவினர், ராமர் கோவில் கட்டுமான பணிகளை விளக்கி நிதி சேகரித்தனர். சேகரிக்கப்படும் நிதி, உடனுக்குடன் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும் என்றும், ராமர் கோவில் கட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் நிதி வழங்குவதாக நிதி சேகரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.