பதிவு செய்த நாள்
14
பிப்
2021
08:02
பரங்கிப்பேட்டை ; பரங்கிப்பேட்டை அருகே முனியனார் கோவிலில் லட்ச தீப விழாவில் ஏராளமான மக்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில் உள்ள முனியனார் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று, லட்ச தீப விழா நடைபெறும். இந்த ஆண்டு 75வது லட்ச தீப விழா, கடந்த 9ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் முனியனார், நல்ல நாயகி, நாயகி அய்யனார், பொன்னி அம்மன், விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு அலங்கார காவடி வீதியுலா வந்து லட்ச தீப விழா நடந்தது.விழாவில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, கோவில் வளாக பகுதிகளில் விளக்கேற்றி வழிபட்டனர்.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.