பதிவு செய்த நாள்
14
பிப்
2021
04:02
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில், அஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புதிய உற்சவர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அதிகாலை, மூலவர் விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகமும், மேலும் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா சங்கல்பம், கணபதி பூஜை, புண்ணியாகம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மகா பூர்ணாஹூதி ஆகிய சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடந்தன. உற்சவ மூர்த்திக்கு பிரதிஷ்டை செய்து, சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்த பின்பு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் சிதம்பரம், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.