திருமலை: திருப்பதி பெருமாளை மலை மேல் சென்று பார்க்கும் முன்பாக பக்தர்கள் கிழே திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயாரை பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள்.
பத்மாவதி தாயார் கோவிலும் பெருமாள் கோவிலில் நடைபெறுவது போலவே எல்லா உற்சவங்களும் நடைபெறும். திருமலை திருப்பதி கோவில் போல சென்னை தி.நகரில் நீண்ட காலமாக பெருமாள் கோயில் செயல்பட்டு வருகிறது அந்த கோவிலுக்கு பக்கத்திலேயே திருப்பதியில் இருப்பது போலவே பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தாம் எண்ணிவந்தது. அவர்களது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் முன்னாள் நடிகை காஞ்சனா உள்ளீட்ட சிலர் நன்கொடையாக கொடுத்த நாற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கிரவுண்டு இடத்தில் தாயாருக்கு சன்னதி கட்ட முடிவு செய்து கடந்த வாரம் பூமி பூஜை போடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிராம கோவில்களுக்கு பசுக்கள் தானமாக வழங்கும் நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. இந்த விழாவில் காஞ்சி விஜேயேந்திரர் சுவாமிகள்,தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.