Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி பொங்கல் வைத்து ... திருநின்றவூர் சிவன் கோவில் சொத்தை குத்தகைக்கு விட்டதா மர்ம கும்பல்? திருநின்றவூர் சிவன் கோவில் சொத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் தங்க கருட வாகனத்தில் வண்ண குடையுடன் அருள்பாலித்த அழகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் தங்க கருட வாகனத்தில் வண்ண குடையுடன் அருள்பாலித்த அழகர்

பதிவு செய்த நாள்

04 அக்
2026
06:10

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் வண்ணக் குடையுடன் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார்.


மதுரை கீழமாரட் வீதி நவநீத கண்ணன் பஜனை கூடம் சார்பில் பக்தர்களின் நேர்த்திக்கடனாக கள்ளழகருக்கு வண்ணக் குடை சாத்தும் வைபவம் ஆண்டு தோறும் புரட்டாசி மூன்றாவது வாரம் நடக்கிறது. அதன்படி, இன்று காலை 8:30 மணியளவில் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள், ஆண்டாள் சன்னதி முன் அலங்கரிக்கப்பட்ட மலர் பந்தலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு பால், பன்னீர், சந்தனம், நுாபுர கங்கை தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் நடந்தது.


இதற்கிடையில், நேற்று  முழுவதும் பஜனைக் கூடத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட வண்ணக் குடை, இன்று காலை பஜனை குழுவினருடன் அழகர்கோவில் புறப்பட்டது. தல்லாகுளம், கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு கள்ளழகர் கோயில் வந்தடைந்தது. பின் சகல பரிவாரங்களுடன் ஆடி வீதிகளில் உலா வந்து ஆண்டாள் சன்னதியை அடைந்தது. அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள் சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள், ஆஸ்தானம் சேர்ந்தார். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar