செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11 மணிக்கு திருமண சீர் வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு குமார் பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சார்யார்கள் திருக்கல்யாணம் நடத்தினர். இதில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, விழா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் மற்றும் விழா குழுவினர், பாகதவர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.