Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் தேவநாத சுவாமி ... திருச்சோபுரநாதர் கோவிலில் சுவாமி  மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு திருச்சோபுரநாதர் கோவிலில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய் பாதானந்தா திரைப்படம்; குரு பக்தியின் உச்சம்: திரை கலைஞர்கள் பாராட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாய் பாதானந்தா திரைப்படம்; குரு பக்தியின் உச்சம்: திரை கலைஞர்கள் பாராட்டு

பதிவு செய்த நாள்

04 அக்
2026
08:10

சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின், வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள, சாய் பாதானந்தா - அன்பின் துாதர் எனும், ஆன்மிக திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிலிம் லேப்பில் நேற்று நடந்தது.


கடந்த 1906ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள பொய்யாமணி கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி. ஷீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக்கொண்டு இறைவழி கடைப்பிடித்தவர், பொய்யாமணி செல்வர் எனப் போற்றப்பட்டார்.


பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் நிறுவனராகவும், மதராஸ் அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் சேவை ஆற்றிய இவர், நிபந்தனையற்ற அன்பை உலகிற்கு போதித்து வாழ்ந்து காட்டியவர். இவர் 1980 ஜன., 14ம் தேதி பெங்களூரில் மகா சமாதி அடைந்தார்.


அவரது ஆன்மிக வாழ்வை போற்றும் வகையில், இத்திரைப்படத்தை தயாரிக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது: 


ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளையின் அறங்காவலர் கிருஷ்ணகுமார்:

என் குருவின் வாழ்க்கை மற்றும் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையே இத்திரைப்படம். சத்யஜோதி பிலிம்ஸ் முழுப் பொறுப்பையும் ஏற்று படத்தை உருவாக்கியது. இப்படைப்பு சிறப்பாக வந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் குருவை மீண்டும் சந்தித்த உணர்வை ஏற்படுத்தியது. விரைவில் திரையரங்குகளிலும், ஓ.டி.டி., தளங்களிலும் வெளியாகவுள்ளது.


முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்: தனது குருவின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து, அவருடைய வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இத்தகைய அரிய முயற்சி யாராலும் எளிதில் செய்ய முடியாதது.


திரைப்பட இயக்குனர் சிறுத்தை சிவா: குருவை போற்றும் இத்திரைப்படம் முழுமையான ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறது. படத்தில் சுவாமிஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மவுலியின் நடிப்பு பாராட்டுக்குரியது. இசை, வசனம், திரைப்படம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.


பாடகர் வீரமணி ராஜு: குருபக்தியின் உச்சத்தை வெளிப்படுத்தும் இப்படத்தில் பாடியது பெரும் பாக்கியம். குறிப்பாக, மகனின் இசையில் பாடியது மகிழ்ச்சி. பொய்யாமணி கோவிலில் இன்றும் தமிழ் ஆரத்தி ஒலிப்பது பெருமை அளிக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar