உடுமலை:உடுமலை திருமூர்த்தி நகர் வனதுர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த 22ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தெய்வகுல காளியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம், சக்தி கும்பம், அம்மன் அழைத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. மாவிளக்கு எடுத்தல் மற்றும் திருக்கல்யாண உற்சவம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீர், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் கோவில் திருவிழா நிறைவையொட்டி, மதியம் 12.30 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும் நடந்தது.