பதிவு செய்த நாள்
17
பிப்
2021
04:02
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பிப்., 26ல், தெப்ப உற்சவம், மறுநாள், கடலில், சுவாமி தீர்த்தவாரி; மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி, மாரிசின்னம்மன் கோவிலில், மார்ச், 12ல், தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான, பல துறையினர் ஒருங்கிணைப்பு கூட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் செல்வம் தலைமையில், நேற்று நடந்தது.பல துறையினர் பங்கேற்ற கூட்டத்தில், போலீஸ் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் மீட்பு, நகரில் பக்தர்களின் வாகனங்களுக்கு தடை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.