பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரஇயலாத பக்தர்கள் தபால் மூலம் பிரசாதம் பெறும் வழிமுறை குறித்து கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயில் செயல் அலுவலர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது: பக்தர்கள் தபால் நிலையத்தில், இ -பேமென்ட் முறையில் ரூ.250 செலுத்தி பதிவு செய்யலாம். இதற்கு பில்லிங் பெயர் Palani Prasadam அல்லது பில்லிங் ஐ.டி., 70063 என்பதை பயன்படுத்த வேண்டும்.ஆன்லைன் மூலம் பதிவு செய்ய https://tnhrce.gov.in இணையதளத்தில் சேவைகள் பிரிவை தேர்ந்தெடுத்து வரிசை எண் 7 ல் பிரசாதம் புக்கிங் என்பதை தேர்வு செய்து பதியலாம். இந்த பிரசாத தொகுப்பில் 500 கிராம் பஞ்சாமிர்த டின், 10 கிராம் விபூதி, 6க்கு 4 இன்ச் அளவில் பழநியாண்டவரின் ராஜஅலங்கார படம் உள்ளது. இதை தபால் துறையினர் வீட்டிற்கே கொண்டு சென்று வழங்குவர், என தெரிவித்தார்.