திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2021 03:02
திருநீர்மலை: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் ரத சப்தமி திருவிழாவில் சேஷவாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, நீர்வண்ண பெருமாளுக்கு, ஆண்டுதோறும் ரத சப்தமி விழா நடக்கும். இந்தாண்டும் ரத சப்தமி பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில், சேஷவாகனத்தில் ரங்கநாத பெருமாள் சீதேவி பூதேவியுடன் குளத்தை சுற்றி வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்திருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.