பெரம்பலுார்: உலக அமைதி வேண்டி, 650 கிலோ மீட்டர் பாத யாத்திரை செல்லும் தம்பதிக்கு பெரம்பலுாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த தம்பதியரான கருப்பையா, சித்ரா ஆகியோர் மகாத்மா காந்தியின் 73வது ஆண்டு நினைவாக, உலக அமைதி வேண்டி திருப்பூர் முதல் சென்னை வரை 650 கிலோ மீட்டர் துாரம் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர். இதன்படி, கடந்த ஜன., 1ம் தேதி திருப்பூரில் பாத யாத்திரையைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டம் ஆகிய பகுதிகளில் வழியாக நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர் இத்தம்பதியினருக்கு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் தீரன் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் மாநில பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்று தம்பதிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் பின்னர் விழுப்புரம் மாவட்டம் நோக்கி சென்ற அவர்களை அனைவரும் வழியனுப்பி வைத்தனர் மார்ச் 12ஆம் தேதி வரை 41 நாட்களில் 650 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து சென்னையில் பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளனர். தம்பதிகள் இதேபோல் 95 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாதயாத்திரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.