வில்லியனுார் - திருக்காஞ்சியில் வரும் 26ம் தேதி நடக்க உள்ள மாசிமக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றிரவு நாக வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், வரும் 20ம் தேதி பாரிவேட்டை, 22ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 24ம் தேதி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 25ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. மறுநாள் 26ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உறுவையாறு, மங்கலம், அரியூர், கரிக்கலாம்பாக்கம் உட்பட பல ஊர்களின் கோவில்களில் இருந்து சுவாமிகள் கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக் குழுவினர் செய்கின்றனர்.