பதிவு செய்த நாள்
19
பிப்
2021
10:02
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படும்.அந்த வகையில் இவ்வாண்டு விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் பத்து நாட்களிலும் காலை, மாலையில், உற்சவர் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதியில் உலா வருவார். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், 24ம் தேதியும், திருக்கல்யாணம், 26ம் தேதியும் நடக்கிறது.தொடர்ந்து, 27ம் தேதி கொடியிறக்கம், 28ம் தேதி பந்தம் பறி உற்வசம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுறும்.கொரோனா காரணமாக, முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை, பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.