திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு நேற்று காலை 5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 6:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 7:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.