பதிவு செய்த நாள்
20
பிப்
2021
10:02
சேலம்: ரத சப்தமி விழாவையொட்டி, சேலம் பட்டைக்கோவில் அருகே, சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில், இன்று, பட்டைக்கோவில் வரதராஜர், அதன் அருகே உள்ள கிருஷ்ணர், அம்மாபேட்டை சவுந்தரராஜர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேசர், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவில்களில் இருந்து, பெருமாள் சுவாமிகள், சூரிய பிரபை வாகனங்களுடன் எழுந்தருளச்செய்வர். தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு மண்டகப்படி சிறப்பு பூஜை நடத்தி ஒரே நேரத்தில் ஐந்து பெருமாள் சுவாமிகளுக்கும், மகா தீபாராதனை காட்டப்படும்.