பதிவு செய்த நாள்
20
பிப்
2021
10:02
ஜலகண்டாபுரம்: ஓங்காளியம்மன் கோவில் பண்டிகையில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். ஜலகண்டாபுரம், செலவடை, தோரமங்கலம், ஓங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், மகிஷா சூரசம்ஹாரம், பொங்கல், தேரோட்டம் நடந்தது. நேற்று, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னி குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு, அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில், சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வலம் வந்தார். பின், அன்னதானம் நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டுடன் பண்டிகை நிறைவடைகிறது.