திருவாடானை : ஓரியூரில் மட்டுவார்குழலி அம்மன் உடனாய சேயுமானவர் கோயில் திருப்பணி தொடக்க விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு திருமறைவேள்வியும்,தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூமி பூஜையும் நடந்தது. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடினர். ஏற்பாடுகளை கோவை அரன்பணி, பெங்களூர் காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை மற்றும் ஓரியூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.