புதுச்சேரி - அலர்மேல்மங்கா சமேத சீனிவாசப் பெருமாள் சுவாமிக்கு வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் திருக்கல்யாண உற்சவம் வரும் 2ம் தேதி நடக்கிறது. மாசிமக தீர்த்தவாரி கமிட்டி கவுரவத் தலைவர் பொன்னுரங்கம் விடுத்துள்ள அறிக்கை: திண்டிவனம் அலர்மேல் மங்கா சமேத சீனிவாசப் பெருமாள் மாசிமக தீர்த்தவாரியில் பங்கேற்க வரும் சுவாமிக்கு, இன்று (26ம் தேதி) மாலை 5:30 மணிக்கு புதுச்சேரி 100 அடி சாலை சாரதாம்பாள் கோவிலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.பின், 27 ம் தேதி காலை 6:30 மணிக்கு வைத்திக்குப்பம் கடல் தீர்த்தவாரிக்கு புறப்பட்டு, காலை 8:30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளல், மதியம் 1 மணிக்கு அம்பலத்தடையார் மடத்து வீதியில் வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்திற்கு சென்றடைகிறது. மாலை 7 முதல் 8 மணி வரை சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.முக்கிய நிகழ்வாக வரும் 28 ம் தேதி காலை 10 மணிக்கு மேல் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் நேரு வீதி வழியாக சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 10:30 மணிக்கு சுதர்சன ஹோமம் நடக்கிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.