கரூர்: கரூர், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. அதில், ஆண்டுதோறும் மாசிமக திருத்தேர் மற்றும் தெப்பத்திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 17ல் கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. தொடர்ந்து பல்லக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை தேரோட்டம், மார்ச், 1ல் இரவு, 7:00 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. மார்ச், 8 வரை உற்சவர் திருவீதி உலா பல்வேறு வாகனங்களில் நடக்கிறது.