புதுச்சேரி; நைனார்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.புதுச்சேரி நைனார்மண்டபத்தில் முத்து மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நான்கு காலபூஜை நடந்தது.நேற்று காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு, 9:45 மணிக்கு கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. முத்துமாரியம்மன், சிவன் பார்வதி பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.