சிவகங்கை : சிவகங்கை அருகே மேலவாணியங்குடி ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இக்கோயிலில் பிப்.,24ல் விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. முதல் மற்றும் 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு யாத்ரதானம், கடம் புறப்பாடுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. காலை 9:10 மணிக்கு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதை தொடர்ந்து சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் சாய்பாபா ஆரத்தி பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகங்கை, வாணியங்குடி உட்பட சுற்றுப்புற கிராமத்தினர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காரைக்குடி: புதுவயல் வெற்றி விநாயகர்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.24ல் அனுஞ்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் மற்றும் முதற்கால பூஜை,யந்தரஸ்தாமனம், அஷ்டபந்தள மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.