உடுமலை: உடுமலை அருகே ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை நடக்கிறது.கணியூரில் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 28ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உத்திர நட்சத்திர பூஜை நடக்கிறது.சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி ஐயப்பன் அருள் பெறுமாறு, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.