சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் பிப்.18 ல் துவங்கியது. தினசரி காலையில் பல்லக்கில் உற்ஸவர் புறப்பாடு. இரவில் பல வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா நடந்தது.7 ம் திருநாளில் சூர்ணாபிேஷகம், 9ம் திருநாளில் வெண்ணெய்த்தாழி அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் பகல், இரவு தெப்பம் வலம் வந்தது.நேற்று 11ம் திருநாளை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு சுவர்ண கவச அலங்காரத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோயிலிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். பின்னர் தெப்பக்குளம் தீர்த்தமண்டபத்தில் பெருமாள், சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து தெப்பக்குளத்தின் கிழக்கு படித்துறையில் எழுந்தருளிய சக்கரத்தாழ்வாருக்கு காலை 11:20 மணி அளவில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மீண்டும் தீர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தரிசனம் தொடர்ந்தது. இரவு பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளல் நடந்தது.