தொண்டி:தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் முனிஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலை சொந்தம் கொண்டாடுவது மற்றும் முதல் மரியாதை சம்பந்தமாக புதுக்குடி மற்றும் அண்ணாநகரை சேர்ந்த இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் 2008ல், கோயில் பூட்டப்பட்டது. இரு பிரிவினரும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சில நாட்களுக்கு முன்பு புதுக்குடி கிராம மக்கள் வழிபடலாம் என்று கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் கோயில் பூட்டு டி.எஸ்.பி. மோகன்ராஜ், துணை தாசில்தார் இருதயம் முன்னிலையில் திறக்கப்பட்டது.