பதிவு செய்த நாள்
03
மார்
2021
06:03
குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குமாரபாளையம், அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று தேர்க்கலசம் வைத்தல், காவிரி ஆற்றிலிருந்து அம்மன் சக்தி அழைத்தல், நாளை காலை, 6:00 மணிக்கு மகா குண்டம் பூ மிதித்தல் வைபவம், பொங்கல் விழா. வரும், 4ல் அம்மன் திருக்கல்யாணம், தேர் திருவிழா, தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை, 5ல் சிறப்பு அலங்கார ஆராதனை, அன்னதானம், அம்மன் அலங்கார திருவீதி உலா, 6ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, 7ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. நாளை, பூ மிதித்தல் வைபவம் நடைபெற உள்ளது. பக்தர்கள் வரிசையில் நின்று பூ மிதிக்க ஏதுவாக தடுப்புகள் அமைக்கும் பணி, தேரோடும் சாலையில் பராமரிப்பு பணி ஆகியவை நடக்கிறது.