பதிவு செய்த நாள்
04
மார்
2021
06:03
குமாரபாளையம்: குமாரபாளையம், அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குமாரபாளையம், அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம் திருவிழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து நேற்று அதிகாலை, அம்மன் சக்தி அழைத்தல் வைபவம் நடந்தது. இதையடுத்து நடந்த மகா குண்டம் பூ மிதித்தல் வைபவத்தில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. விழாக்குழு தலைவர் மதிவாணன், நகர அ.தி.மு.க., செயலர் நாகராஜன், முன்னாள் நகர செயலர் குமணன், புருஷோத்தமன் மற்றும் பலர் பங்கேற்றனர். கோட்டைமேடு காளியம்மன் கோவில் மற்றும் அனைத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.