Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நரசிம்மருக்கு சுவாதி திருமஞ்சனம் தண்டுமாரியம்மன் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மேல்மருவத்துாரில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
06:03

 மேல்மருவத்துார் : ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், செவ்வாடை அணிந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா, நேற்று, நடைபெற்றது. அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெற்றோர் படங்களுக்கு தீபாராதனை காட்டி, பங்காரு அடிகளார் வழிபட்டார்.மலர் அலங்கார ரதத்தில், பங்காரு அடிகளார், சித்தர் பீடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, செவ்வாடை அணிந்த பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி என்ற கோஷங்களை எழுப்பினர். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஊர்வலமாக வந்தனர். பின், கருவறைக்கு சென்று, சுயம்பு அன்னை, ஆதிபராசக்தி அம்மனை, அடிகளார் வழிபட்டார். அதன் பின், பிறந்த நாள் கேக் வெட்டினார்.சிறப்பு அலங்கார மேடையில், பங்காரு அடிகளார் அமர்ந்து, செவ்வாடை பக்தர்களுக்கு அருள் தரிசனம் கொடுத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், ஒய்வு பெற்ற நீதிபதிகள் தணிகாசலம், முருகேசன், மூத்த வழக்கறிஞர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழகம் மட்டும் இன்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான செவ்வாடை பக்தர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களின், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar