மதுரை: மதுரையில் உயர்நீதிமன்றம் கிளை வழிகாட்டுதல்படி நடந்த ராம ரத யாத்திரைக்கு பல்வேறு இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள் ராமர் கோயில் கட்ட தாராளமான நிதியுதவி வழங்கினர்.நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் ரத யாத்திரையை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த தத்ப்ராபனந்தா சுவாமி துவக்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் முத்துக்குமார், சந்திரன், சேகர், மங்கள முருகன், பா.ஜ., நகர் தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரிசர்வ்லைன், நேதாஜி ரோடு மாரியம்மன் கோயில்கள், செல்லுார் 60 அடி ரோடு வழியாக ரத யாத்திரை நடந்தது.