பதிவு செய்த நாள்
05
மார்
2021
05:03
பேரூர் : நமது நாளிதழ் செய்தியால், பூண்டி வெள்ளிங்கிரி கோவிலில் குடிநீர் பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது.
பூண்டி வெள்ளிங்கிரி கோவில் மலையேற்றத்துக்கு, கடந்த, 1ம் தேதி வனத்துறை அனுமதி வழங்கியது. உள்ளூர் மட்டுமின்றி மதுரை, தேனி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திர பழுது காரணமாக, குடிநீர் இன்றி பக்தர்கள் தவித்தனர். பொதுக்கழிப்பிடமும் புதர் சூழ்ந்திருந்தது. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று, இயந்திர பழுது நீக்கப்பட்டு, குடிநீர் பிரச்னை சரி செய்யப்பட்டது. கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி, இன்று துவங்கவுள்ளது. அதே போல், இரண்டாவது மலைப்பாதையின் குறுக்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது..