ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம், 16ல் இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கடந்த, 22ல் இரவு, 7:00 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு, 28ல் பாலாபிஷேகம் நடந்தது. 1ல் இரவு அக்னி கபாலம் நடந்தது. 2ல் மாலை, 6:00 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை, 5:00 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரிகள் மற்றும் காப்பு கட்டி விரதம் இருந்த கோவில் நிர்வாகிகள் மட்டும் குண்டம் இறங்கினார்கள். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.