Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமரபுயங்கீஸ்வரர் கோவில் மகா ... முதுகுளத்தூர் அருகே கோயில் சிலை சேதம், பணம் திருட்டு முதுகுளத்தூர் அருகே கோயில் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:03

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நடந்த பூச்சொரிதல் விழாவில் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டார்.

இக்கோயிலில் பங்குனித் திருவிழாவிற்கு முன்னதாக ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு நகரில் பல்வேறு இடங்களில் பூக்களை தட்டுகளில் பரப்பி அலங்கரித்து வைத்திருந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க பெண்கள், இளைஞர்கள் பூத் தட்டுகளை கைகளில் ஏந்தி கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து இரவு 11:00 மணி தொடங்கி மூலவருக்கு மல்லி, ரோஜா, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டார்.

இதேபோல் கோயிலில் அருள்பாலிக்கும் அனைத்து பரிவார தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்டனர். பின்னர் காலை சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையொட்டி நகரில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மார்ச் 19 அன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல், மறுநாள் கோயில் கொடிமரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு பங்குனி விழா நடக்க உள்ளது. பத்து நாட்களும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருவார். மார்ச் 28 அன்று இரவு 8:00 மணிக்கு மின்சார தீப தேரோட்டமும், மார்ச் 30 இல் பக்தர்கள் நேர்த்தி கடனாக பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும், ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar