பதிவு செய்த நாள்
06
மார்
2021
04:03
உடுமலை: சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவில், கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த, அமரபுயங்கீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில், கும்பாபிேஷக விழா, 4ம் தேதி மங்கள இசையுடன் துவங்கி, மகாகணபதி ேஹாமம் உட்பட சிறப்பு வழிபாடுகள் அன்று நடந்தது. பின்னர், முளைப்பாரி, தீர்த்தம் எடுத்து வருதல், முதற்கால யாக பூஜை நிறைவு பெற்றது. நேற்று காலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.காலை, 7:30 மணிக்கு மேல், விமானம், மூலவருக்கு கும்பாபிேஷகம் நடந்தது. ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க, திரளான பக்தர்கள், கும்பாபிேஷகத்தில், பங்கேற்றனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், அமரபுயங்கீஸ்வரர் அருள்பாலித்தார். கோவிலில், இன்று முதல், 12 நாட்களுக்கு, மண்டல பூஜை நடக்கிறது.