அன்னூர்: மொண்டிபாளையம் அருகே, திம்மநாயக்கன்புதூரில், பைரவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், தேய்பிறை அஷ்டமி நாளன்று, சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு, தேய்பிறை அஷ்டமி சிறப்பு வேள்வி நடந்தது. இதையடுத்து, பால், நெய், தேன், உள்ளிட்ட திரவியங்களால், பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 9:00 மணிக்கு, அலங்கார பூஜையைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னூர், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.