பதிவு செய்த நாள்
08
மார்
2021
04:03
திண்டிவனம்:செஞ்சி தி.மு.க., - எம்.எல்.ஏ., மஸ்தான், தன் திருமண நாளையொட்டி, சாய்பாபா மற்றும் கால பைரவரை வழிபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மஸ்தான், தன், 36வது திருமண நாளை முன்னிட்டு, திண்டிவனம் - செஞ்சி சாலையில் உள்ள சிவ சாய்பாபா கோவிலுக்கு, மனைவி சைதானி பீவியுடன் சென்று, வழிபட்டார். அங்குள்ள கால பைரவருக்கு நடந்த, தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். திண்டிவனம் எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர். தேய்பிறை அஷ்ட மியில் பைரவரை வணங்கினால், பகைவர்களின் தொல்லை நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.