திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2021 11:03
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசிபெருந்திருவிழாக தேர் திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கனக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துச்சென்றனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், மாசிப்பெருந்திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்ற வருகிறது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், முத்துபல்லக்கு போன்றவற்றில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித்திருவிழா தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கனக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துச்சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் உற்சவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.