உசிலம்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் உள்ள குலதெய்வ கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலில் வழிபடுபவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருவிழா கேள்விக்குறியானது. நேற்று மாலை 5:00 மணியளவில் தாசில்தார் விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் மாரியப்பன் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆதி வழக்கப்படி திருவிழாவை தற்போது நடத்திவிட்டு பிரச்னைகளை தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம் என முடிவு செய்து சமரசம் ஏற்பட்டது. அதன்படி மாசிப்பச்சை திருவிழா நடைபெற உள்ளது.