பதிவு செய்த நாள்
12
மார்
2021
06:03
புதுச்சேரி - புதுச்சேரியில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், மிஷன் வீதி காளத்தீஸ்வரர் கோவில், இரும்பை மாகாளேஸ்வரர் கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். வேதபுரீஸ்வரரர் கோவிலில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், பா.ஜ,, மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.குரு சித்தானந்த சுவாமி கோவில்கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை முதல் கால பூஜை, இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை இரண்டாம் கால பூஜை நடந்தது. இரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை மூன்றாம் கால பூஜை, காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை நான்காம் கால பூஜை நடந்தது.சிவராத்திரி விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் செய்தனர். திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவில், பேட்டையன் சத்திரம் சிவசடையப்பர் கோவில், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில், வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.