உளுந்தூர்பேட்டையில் மகா சிவராத்திரி மயானகொள்ளை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2021 06:03
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் நடந்த மகா சிவராத்திரி மயானகொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில் மகா சிவராத்திரி மயான கொள்ளை திருவிழா நடந்தது. இந்தத் திருவிழா கடந்த 6ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் உற்சவ திருவிழா வரும் 15ம் தேவியுடன் நிறைவு பெறுகிறது. இன்று மயான கொள்ளை திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வந்து, மயான கொள்ளையில் காசு, மணிலா உள்ளிட்ட தானிய வகைகள் சூரை விடப்பட்டன. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.