பதிவு செய்த நாள்
15
மார்
2021
05:03
வீரபாண்டி: பங்குனி மாத பிறப்பு மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காளிப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயருக்கு அபி ?ஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி சென்றாயபெருமாள் கோவிலில், ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயருக்கு, ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். பங்குனி மாத பிறப்பான நேற்று, முதல் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்து வந்தது.வீரபக்த ஆஞ்ச நேயருக்கு நேற்று காலை, 16 வகையான மங்கல பொருட்களால் அபி ?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து துளசி, சாமந்தி, ரோஜா பூக்களால் கட்டப்பட்ட மாலைகள், பரிவட்டம் கட்டப்பட்டு, புதுப்பட்டு உடுத்தி, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. முதல் ஞாயிற்றுக்கிழமையில், ஆஞ்சநேயரை தரிசிக்க இரு மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.